News August 10, 2025

மனைவி சமையலை கணவர் விமர்சிப்பது குற்றமல்ல: HC

image

மனைவியின் சமையல், ஆடை பற்றி விமர்சிப்பது கிரிமினல் குற்றமல்ல என மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. MH-யை சேர்ந்த பெண் ஒருவர் கணவர் வீட்டார் கண்ணியமாக நடத்தவில்லை என போலீசில் புகார் செய்த நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், ஐகோர்ட்டை நாடிய கணவரின் மனுவை விசாரித்த நீதிபதி, பெண்ணுக்கு கொடுமை இழைக்கப்பட்டால் தான் IPC 498A-ல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.

Similar News

News August 12, 2025

நடிகை ஷகிலா போலீஸில் பரபரப்பு புகார்

image

சோஷியல் மீடியாவில் பிரபலமாகி தற்போது படங்களில் நடித்து வரும் திவாகர் மீது நடிகை ஷகீலா போலீஸில் புகார் அளித்துள்ளார். நெல்லை கவின் ஆணவக் கொலையை நியாயப்படுத்தி சாதிய ரீதியில் திவாகர் பேட்டியளித்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அவர் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஷகீலா கோரிக்கை விடுத்துள்ளார்.

News August 12, 2025

BREAKING: திருப்பதியில் இனி FASTAG கட்டாயம்

image

ஆக.15-ம் தேதி முதல் திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு அலிபிரி சோதனைச் சாவடியில் அனுமதி இல்லை எனவும், பக்தர்களின் வசதிக்காக பாஸ்டேக் ரீசார்ஜ் மற்றும் அப்ளை செய்து புதிய ஐடி பெற கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் திருப்பதி செல்வோர் இதனை மறக்காமல் செய்துவிடுங்கள். SHARE IT.

News August 12, 2025

விஜய்க்கு ஆஃபர் கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்

image

விஜயகாந்தை தனது குரு என விஜய் பகிரங்கமாக அறிவித்தால் அவருடைய போட்டோவை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கலாம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். ஒரு சில இடங்களில் தவெகவினர் விஜயகாந்த் போட்டோவை பயன்படுத்தி வந்த நிலையில், DMDK-வை தவிர வேறு அரசியல் கட்சிகள் விஜயகாந்த் போட்டோவை பயன்படுத்தக் கூடாது என கடந்த வாரம் கூறியிருந்தார். அண்மையில், DMDK, TVK உடன் கூட்டணி பேச்சு நடத்துவதாக தகவல் வெளியானது.

error: Content is protected !!