News August 10, 2025
சிக்கன் விலை கடும் சரிவு

TN-ல் கோழி இறைச்சி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த மாத இறுதியில் மொத்த விற்பனையில் 1 கிலோ ₹132-க்கு விற்பனையான சிக்கன் தற்போது ₹93-க்கு விற்பனையாகிறது. 10 நாள்களில் கிலோவுக்கு ₹39 குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் 1 கிலோ ₹240-ல் இருந்து ₹200 ஆக குறைந்துள்ளது. ஆடி மாதம் ஆன்மிக மாதம் என்பதால் நுகர்வு குறைவே விலை சரிவுக்கு காரணம் என வியாபாரிகள் கூறியுள்ளனர். உங்கள் ஊரில் சிக்கன் விலை என்ன?
Similar News
News August 11, 2025
விவாகரத்து பெறுகிறாரா ஹன்சிகா? வைரல் போஸ்ட்!

இன்ஸ்டா Profile-ல் இருந்து கணவருடன் இருக்கும் போட்டோஸை டெலிட் செய்ததில் இருந்து நடிகை ஹன்சிகா விவாகரத்து பெறவுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில்தான், தனது இன்ஸ்டாவில் ஹன்சிகா, தான் கேட்காத பல பாடங்களை இந்த வருடம் தனக்கு கற்றுக் கொடுத்துள்ளதாக ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். ஒருவேளை அவர் விவாகரத்தை தான் சைலெண்டாக சொல்கிறாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News August 11, 2025
BREAKING: கூட்டணியை உறுதி செய்த தேமுதிக?

ஜெயலலிதா, பிரேமலதா ஒன்றாக நிற்பதுபோன்ற புகைப்படத்தை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாகியுள்ளது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை பிரேமலதா சந்தித்த நிலையில், இந்த போட்டோ அதிமுக – தேமுதிக கூட்டணிக்கு அச்சாரமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News August 11, 2025
சைலெண்டாக வங்கிகள் இதற்கும் பணம் பிடிக்கின்றன!

1. அக்கவுண்டில் பணம் இல்லாத போது, ATM பயன்படுத்தினால், ₹20- ₹25 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
2. போனில் SMS மூலம் வங்கி சேவை குறித்து அலர்ட் அனுப்ப 3 மாதங்களுக்கு ஒருமுறை ₹15- ₹30 வரை வசூலிக்கப்படுகிறது.
3. 12 மாதங்களுக்கு மேலாக அக்கவுண்ட்டில் பரிவர்த்தனை இல்லாமல் இருந்தால், அதற்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணம் மாறுபட்டாலும், பல வங்கிகளும் சைலெண்டாக பணம் வசூலிக்கதான் செய்கின்றன.