News April 7, 2024
வரலாற்றில் இன்று

➤1946 – பிரான்சிடம் இருந்து சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.
➤1948 – உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் தொடங்கப்பட்டது.
➤1948 – சீனாவில் ஷாங்காயில் பௌத்த மத தலம் எரிந்ததில் 20 புத்த குருக்கள் உயிரிழந்தனர்.
➤1990 – எசுக்காண்டினாவியன் ஸ்டார் பயணிகள் கப்பல் தீப்பிடித்ததில் 159 பேர் உயிரிழந்தனர். 2003 – அமெரிக்கப் படைகள் பக்தாதைக் கைப்பற்றின.
Similar News
News February 2, 2026
DCM சுனேத்ரா பவார் மீது ₹25,000 கோடி மோசடி புகார்

சுனேத்ரா பவார் மீதான ₹25,000 கோடி மோசடி புகாரே சரத் பவார், அஜித் பவார் அணியை மீண்டும் ஒன்று சேராமல் தடுத்து சுனேத்ராவை மீண்டும் NDA கூட்டணியில் இணைத்துள்ளதாம். 2002 – 2017 காலகட்டத்தில் MSCB வங்கியில் போலியான ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாக அவர் மீதான மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு(EOW) போலீசார் அவரை விடுவித்தாலும், ED வழக்கை தூசித்தட்டி விசாரணை நடத்தி வருகிறது.
News February 2, 2026
டிமாண்டை ஏற்றிக்கொண்டே போகிறதா காங்கிரஸ்?

திமுகவிடம் வரும் தேர்தலுக்கு மட்டுமல்லாமல், 2029 தேர்தலுக்கும் சேர்த்து ராகுல் டீல் பேசியிருப்பதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, கொள்கைகளை செயல் வடிவம் ஆக்க அதிகாரத்தில் பங்கு முக்கியம் என்ற அவர், இப்போதே லோக்சபா தேர்தலுக்கு 15 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என உத்தரவாதம் கேட்கிறாராம். இதனால் திமுக சற்று டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது.
News February 2, 2026
தேமுதிக வைத்த டிமாண்ட்.. டென்ஷனில் திமுக, அதிமுக

கூட்டணியில் தேமுதிகவை இணைக்க திமுக, அதிமுக தயக்கம் காட்டுவதற்கு, பிரேமலதா வைக்கும் டிமாண்டே காரணமாம். 20 தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா சீட் என்ற டிமாண்டுக்கு, அதிமுக 6-10 தொகுதிகள் தரலாம் என்றும், அதைவிட குறைவான எண்ணிக்கையே சாத்தியம் எனவும் திமுக தலைமை கூறியதாம். இதனிடையே, பிரேமலதாவை DCM ஆக்குவோம்; நாங்கள் இன்றி ஆட்சியமைக்க முடியாது என LK சுதீஷ் பேசியது இருபெரிய கட்சிகளுக்கும் எரிச்சலை தந்துள்ளதாம்.


