News August 10, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான 45 நாட்கள் அழகுக்கலை & சிகை அலங்காரத்தில் இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த பயிற்சிக்கு 8th முதல் 12th வரை படித்த, 18- 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் <>இந்த இணையத்தளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலத்தில் இலவச தங்குமிடம், உணவுடன், மாதம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை சம்பளத்துடன் வேலைவாய்ப்பும் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

Similar News

News August 11, 2025

கிருஷ்ணகிரி: கிராம உதவியாளர் பணி… கடைசி வாய்ப்பு

image

கிருஷ்ணகிரியில் காலியாக உள்ள 33 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. அஞ்செட்டி-08, போச்சம்பள்ளி-15, கிருஷ்ணகிரி-10 இடங்கள் உள்ளன. இப்பதவிக்கு 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் நாளைக்குள் <>இந்த லிங்கில் <<>>உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ, அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம். நல்ல வாய்ப்பு நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

கிருஷ்ணகிரியில் 936 பேர் கைது!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக மாவட்ட காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்தாண்டில் மொத்தம் 167 கஞ்சா வழக்கில் 187 பேரும், புகையிலை பொருட்கள் கடத்தல் தொடர்பாக 772 வழக்குகளில் 769 பேர் கைது செய்யப்பட்டும், 7,535 லிட்டா் எரிசாராயமும், 3,013 லிட்டா் வெளிமாநில மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News August 10, 2025

கிருஷ்ணகிரி இன்று இரவு ரோந்து பணி விவரம்‌

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆக.10) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!