News August 10, 2025
நிலத்தை விட்டுக் கொடுக்க முடியாது: ஜெலன்ஸ்கி

போர் நிறுத்தத்திற்காக தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விட்டுத்தர முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தங்கள் மக்களுக்கு கவுரவமான சமாதானம் வேண்டும், உக்ரைன் இல்லாமல் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக அடுத்த வாரம் புடினை சந்தித்து பேச உள்ள நிலையில், நிலப்பகுதி பரிமாற்றங்கள் இருக்கும் என டிரம்ப் கூறியிருந்தார்.
Similar News
News August 11, 2025
தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவை: ஸ்டாலின்

தேர்தல் ஆணையத்தை பாஜக தனது மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். <<17339036>>பெங்களூருவின் மகாதேவபுராவில்<<>> நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல; திட்டமிட்ட சதி எனவும் அவர் சாடியுள்ளார். டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என வலியுறுத்திய அவர், ராகுல் காந்தியின் போராட்டத்துக்கு திமுக தோளோடு தோள் கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
இன்று ஒரே நாளில் இந்தியா, பாக்., போர் ஒத்திகை

பஹல்காம் தாக்குதலால் பாக்.,- இந்தியா இடையே போர் பதற்றம் தொற்றியது. பாக்., பின்வாங்கியதால் தாக்குதல் கைவிடப்பட்டது. தற்போது அமெரிக்கா சென்றுள்ள பாக்., ராணுவ தளபதி அசிம் முனிர், இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்நிலையில், அரபிக் கடலில் இந்திய கடற்படை இன்று போர் ஒத்திகையில் ஈடுபடுவதாக அறிவித்தது. இதனால் பதறிப்போன பாக்.,கும் இன்றே போர் ஒத்திகையில் ஈடுபடபோவதாக கூறியுள்ளது.
News August 11, 2025
இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான்

இந்தியாவுடனான மோதலுக்கு பின் 2-வது முறையாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் அமெரிக்கா சென்றுள்ளார். இதனிடையே, இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் அணு ஆயுதத்தை வைத்து பாதி உலகையே அழித்து விடுவோம் என அசிம் முனிர் எச்சரித்துள்ளார். சிந்து நதியில் இந்தியா அணை கட்டும் வரை காத்திருப்போம் என கூறிய அவர் கட்டிய பின் ஏவுகணைகளால் அதை அழித்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.