News August 10, 2025
ரயில்வே பண்டிகை கால ஆஃபர்

பண்டிகை காலங்களில் டிக்கெட் புக் செய்யும் போது, ரிட்டன் டிக்கெட்டையும் சேர்த்து புக் செய்தால் கட்டணத்தில் 20% தள்ளுபடி செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 13 முதல் 26-ம் தேதி வரை சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் புக் செய்ய வேண்டும். அதன்போதே, நவ., 17 முதல் டிச., 1-ம் தேதி வரையில் ரிட்டன் டிக்கெட்டுக்கான புக்கிங் செய்ய வேண்டும். இதற்கான புக்கிங் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது.
Similar News
News August 11, 2025
இனி இளம் வழக்கறிஞர்களின் காலம்… அமலாகும் புதிய விதி

சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் அவசர வழக்காக இம்மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை இளம் வழக்கறிஞர்கள் மட்டுமே வைக்க முடியும். மூத்த வழக்கறிஞர்களுக்கு இந்த வாய்ப்பு இனி கிடையாது. கடந்த 6-ம் தேதி இந்த உத்தரவையை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பிறப்பித்தார். ஐகோர்ட்டுகளில் இதே முறையை பின்பற்றுவது தொடர்பாக அந்தந்த தலைமை நீதிபதிகள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
BJP நட்பை விரும்பாத OPS.. விஜய்யுடன் கூட்டணியா?

தமிழகம் வந்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷை சந்திக்க வருமாறு OPS-க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த சந்திப்பை அவர் தவிர்த்துவிட்டு, சொந்த ஊரிலேயே தங்கிவிட்டாராம். BJP மீது அதிருப்தியில் இருந்த அவருடன் TTV சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், OPS தரப்பு பாஜகவுடன் மீண்டும் இணைவதை விரும்பவில்லையாம். அதுமட்டுமல்லாமல், கூட்டணி மாறும் (விஜய்) முடிவில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
News August 11, 2025
மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு

திருவனந்தபுரத்திலிருந்து 5 MP-க்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னையை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், உடனே சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால், பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.