News August 10, 2025
ஆகஸ்ட் 10: வரலாற்றில் இன்று

*610 – முகம்மது நபி குர்ஆனை அளித்த நாள். 1741 – குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையினரைத் தோற்கடித்தார். *1916- தமிழ் எழுத்தாளரும், இதழாசிரியருமான சாவி பிறந்தநாள். *1948 –இந்திய அணுசக்திப் பேரவையை ஜவகர்லால் நேரு துவக்கி வைத்தார். *1990- நாசாவின் மெகலன் விண்கலம் வெள்ளி கோளை அடைந்தது.
Similar News
News August 11, 2025
BJP நட்பை விரும்பாத OPS.. விஜய்யுடன் கூட்டணியா?

தமிழகம் வந்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷை சந்திக்க வருமாறு OPS-க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த சந்திப்பை அவர் தவிர்த்துவிட்டு, சொந்த ஊரிலேயே தங்கிவிட்டாராம். BJP மீது அதிருப்தியில் இருந்த அவருடன் TTV சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், OPS தரப்பு பாஜகவுடன் மீண்டும் இணைவதை விரும்பவில்லையாம். அதுமட்டுமல்லாமல், கூட்டணி மாறும் (விஜய்) முடிவில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
News August 11, 2025
மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு

திருவனந்தபுரத்திலிருந்து 5 MP-க்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னையை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், உடனே சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால், பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.
News August 11, 2025
துணை ஜனாதிபதி தேர்தல்.. வெல்லப்போவது யார்?

லோக்சபா, ராஜ்யசபா என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து தற்போது 781 MP-க்கள் உள்ளனர். ஒரு வேட்பாளர் வெற்றி பெற 391 வாக்குகள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 MP-க்கள் பலம் உள்ளதால், அக்கூட்டணியின் வேட்பாளரே வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், வரும் செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.