News August 10, 2025
₹5 லட்சத்திற்கு ஏலம் போன கில்லின் ஜெர்ஸி

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்ததும், இரு அணி வீரர்கள் அணிந்த ஜெர்ஸி, தொப்பிகள் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டன. இதில் இந்திய அணியின் கேட்பன் சுப்மன் கில்லின் ஜெர்ஸி அதிகபட்சமாக ₹5.6 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. மொத்தமாக இந்திய அணியின் ஜெர்ஸிகள் ₹33.9 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டன. இந்த பணம் ரூத் ஸ்ட்ராஸ் அறக்கட்டளை மூலம் பொது சேவைக்கு வழங்கப்பட உள்ளன.
Similar News
News August 11, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 424 ▶குறள்: எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. ▶பொருள்: நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.
News August 11, 2025
இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும்: நிதின் கட்கரி

அமெரிக்கா வளர்ந்த நாடு என்பதால் வரி என்ற பெயரில் மற்ற நாடுகளை மிரட்டுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியா இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் எனவும், நாம் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வளர்ந்த நாடாக மாறினால் நாம் யாரையும் மிரட்டமாட்டோம், ஏனெனில் அதையே நமது கலாச்சாரம் கற்றுக் கொடுக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
கோலி, ரோகித் ஓய்வு பெற அழுத்தம்?

ஆஸி.,க்கு எதிரான ODI தொடருக்குப்பின் கோலி, ரோகித் ஓய்வு பெற BCCI அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியானது. 2027 ODI WC-ன் போது கோலிக்கு 39, ரோகித்துக்கு 40 வயதாகியிருக்கும் என்பதால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலை BCCI மறுத்துள்ளது. ஓய்வு தொடர்பாக ஏதேனும் ஐடியா இருந்திருந்தால் அவர்களே தெரிவித்து இருப்பார்கள் என BCCI மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.