News August 10, 2025

ஆயுத உற்பத்தியில் புதிய சாதனை

image

இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2024-25-ம் ஆண்டில் ₹1.50 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ₹1.27 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 18% அதிகரித்துள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனங்கள் 77%, தனியார் நிறுவனங்கள் 23% பங்களிப்பை செய்துள்ளன.

Similar News

News August 13, 2025

சிம்ம முகத்துடன் காட்சி தரும் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி!

image

கும்பகோணம் அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி சிம்ம முகம், 18 கரத்துடன் காணப்படுகிறாள். கவுரவர்களிடம் தோற்று காட்டுக்கு சென்ற பஞ்ச பாண்டவர்கள் நாட்டை மீட்க, இங்கு வந்து யாகம் வளர்த்து பிரத்யங்கிரா தேவியை வழிபட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இன்றளவும் அமாவாசை தோறும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டால் மன தைரியம் கிடைக்கும். SHARE IT.

News August 13, 2025

கைதுக்கு முன்பே திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பொன்வசந்த்

image

சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மேயர் இந்திராணியின் கணவரும், திமுகவின் முக்கிய முகமாக இருந்தவருமான பொன்வசந்த் நேற்று கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, திமுக ஆட்சியில் ஊழல் நடப்பதற்கு இதுவே சான்று என்று அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், பொன்வசந்த் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவுடன், கைது நடவடிக்கைக்கு முன்னரே, அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக திமுகவினர் பதிலளித்து வருகின்றனர்.

News August 13, 2025

ED விசாரணை வளையத்தில் சுரேஷ் ரெய்னா

image

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. 1XBet என்ற சூதாட்ட செயலி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் ED, அதில் சுரேஷ் ரெய்னாவுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க உள்ளது. அதன்படி டெல்லியில் உள்ள ED அலுவலகத்தில் இன்று ரெய்னா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.

error: Content is protected !!