News August 10, 2025
நாகை அவுரி திடலில் இலவச கண் சிகிச்சை முகாம்

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவுரி திடலில் இன்று (ஆக.10) காலை 8 மணி முதல் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமனது லயன்ஸ் கிளப் மற்றும் தனியார் கண் மருத்துவமனை இணைந்து நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 13, 2025
நாகை-தஞ்சை பயணிகள் ரயிலின் நேரம் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக பிற்பகல் 1 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், கீழ்வேளுர் வழியாக தஞ்சாவூர் வரை செல்லும் பயணிகள் ரயிலானது ஆகஸ்ட் 13-ம் தேதி (இன்று) முதல் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை, ஒரு மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
நாகை: மத்திய அரசு வேலை; EXAM கிடையாது!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில், பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பபடவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News August 13, 2025
நாகை: 10 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து

கீழ்வேளுர் – திருவாரூர் இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் காரைக்காலில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு நாகை, கீழ்வேளுர் வழியாக திருச்சி செல்லும் பயணிகள் ரயில் வருகின்ற ஆக.13-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!