News August 10, 2025

திருப்பத்தூரில் இன்று பாரம்பரிய கண்காட்சி

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பிரியா மஹாலில் இன்று (ஆக.10) ஆம்பூர் மரபுசார் பாரம்பரிய அரிசி மற்றும் விதைகள் கண்காட்சி நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி இலவசம். கண்காட்சியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி, இயற்கை வேளாண்மை விற்பனையகங்கள், மூத்த முன்னோடி ஆளுமைகளின் சிறப்புரை, பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 3, 2026

திருப்பத்தூர் ஆட்சியருக்கு புத்தாண்டு வாழ்த்து

image

ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், இன்று (ஜன.3) திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவ செளந்திரவல்லிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்ற இவர், ஆட்சியருக்கு சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் மாவட்ட பிரதிநிதி கிரிவேலன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அச்சுதன் ஆகியோர் பங்கேற்றனர்.

News January 3, 2026

திருப்பத்தூர் காவல்துறை முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் காவல் துறை சார்பில் தினம்தோறும் ஒரு விழிப்புணர்வு செய்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகிறது. இன்று (ஜன.3) உதவி எண்களில் பெரும்பாலானவை பொய்யானவைகளாகும். பொய்யான உதவி எண்கள் மூலம் ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றது. இத்தகைய குற்றங்கள் குறித்து Cyber Crime Help Line: 1930 அல்லது Website:www.cybercrime.gov.inல் மூலம் காவல் துறையிடம் புகார் அளிக்கலாம்.

News January 3, 2026

திருப்பத்தூர்: ஆதார் துறையில் ரூ.20,000 சம்பளம்! APPLY NOW

image

திருப்பத்தூர் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!