News August 10, 2025

காவலர் மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

image

மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் காவலர் மருத்துவமனைக்கு வேண்டிய மருத்துவ உபகரணங்களான தெர்மா மீட்டர், stretcher, எடை இயந்திரம், உயரம் அளவிடும் கருவி மற்றும் சக்கர நாற்காலி போன்றவற்றை இன்று (ஆக.09) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் காவலர்களின் நலன் கருதி காவலர் மருத்துவமனை மருத்துவர்களிடம் வழங்கினார்.

Similar News

News August 10, 2025

கல்குவாரியில் மூழ்கி சிறுவர் – சிறுமி உயிரிழப்பு..!

image

மதுரை பாண்டியன் கோட்டை கல்மேடு குவாரி பகுதியில் நரிமேட்டைச் சேர்ந்த 9 வயது சிறுமி சையது அலி சஹானா மற்றும் இவரது சித்தப்பா மகனான 3 வயது சிறுவன் ஆஷிக் ராஜா ஆகிய இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் மற்றும் சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News August 10, 2025

மதுரை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

மதுரை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.

News August 10, 2025

JUST IN: மதுரை விவசாயிக்கு நேர்ந்த சோகம்

image

மதுரை மாவட்டம் விளாச்சேரி அருகே மின்சாரம் தாக்கிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார். தோட்டத்தில் நிலத்திற்காக போடப்பட்ட மின்சார வேலியை தொட்ட நிலையில் விவசாயி கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!