News August 10, 2025
நெல்லை மாவட்ட இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஆக.09) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
Similar News
News August 11, 2025
நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் அழைப்பு

இன்று (11.08.2025) காலை 11:00 மணியளவில் மாநகராட்சி மைய அலுவலக இராஜாஜி மண்டப கூட்ட அரங்கில் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆணையாளர் மற்றும் துணை மேயர் ராஜி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் விவாதிக்கப்பட உள்ளதால் கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டும் என மேயர் அழைப்பு கொடுத்துள்ளார்.
News August 10, 2025
ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழப்பு

கருங்குளம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் பாளை திருச்செந்தூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக பைக் மோதியதில் பாலமுருகன் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த பாலமுருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து சிவந்திப்பட்டி போலீசார் விசாரணை.
News August 10, 2025
நெல்லை: ரேஷன் கார்டு ONLINEல விண்ணப்பிப்பது எப்படி?

நெல்லை மக்களே!
1. இங்கு <
2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
5. விண்ணப்ப நிலையை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில…
ரேஷன் கார்டு பெயர் நீக்கம், சேர்த்தல் தொடர்ச்சி வேணுமா COMMENT.. SHARE பண்ணுங்க!