News August 10, 2025

வேலூர் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகம், வட ஆற்காடு ஓவியர் சங்கம் மற்றும் டாட் இமேஜிங் நுண் கலைக்கூடம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது. இதில் 1 வயது முதல் 12  வயது வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். முன் பதிவிற்கு 7667580831, 9443885207 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 9, 2025

வேலூர்: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா..?

image

வேலூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள<> இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் அணுகலாம். (SHARE IT)

News December 9, 2025

வேலூர் கலெக்டர் அறிவித்தார்!

image

வேலூரில் 8 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்‌. அதன்படி காட்பாடி தாலுகா துணை தாசில்தார் துளசிராமன், காட்பாடி தேர்தல் துணை தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த குமார், கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவு தலைமை உதவியாளராகவும், வருவாய் கோட்ட துணை தாசில்தார் வாசுகி, கலெக்டர் அலுவலக ‘ஈ’ பிரிவு கண்காணிப்பாளராகவும், இதேபோல் 8 பேர் பணியிட மாற்றப்பட்டுள்ளனர்.‌

News December 9, 2025

வேலூரில் மலிவு விலையில் வாகனம்!

image

வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த வாகனம் முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்டு எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 22ஆம் தேதி காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. மேலும் வாகனத்தினை பார்வையிட விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் பார்வையிட அனுமதிக்கப்படுவர் என வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!