News August 9, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த எம்பி

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக புதியதாக பொறுப்பேற்றுள்ள ச. அருண்ராஜ்க்கு மரியாதை நிமிர்த்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று (ஆகஸ்ட் 9) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா மற்றும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் உடன் இருந்தனர்.
Similar News
News August 13, 2025
பாடாலூர் அருகே விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் கைது

பாடாலூர் சந்தைப்பேட்டை அருகே கடந்த மாதம் 31ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த நம்பு குறிச்சி கிராமத்தை சேர்ந்த ரங்கராஜ் (63) மீது கனரக வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று விட்டனர். பின் சிசிடிவி கேமிரா மூலம் போலீசார் தீவிர தேடுதல் பணி நடைபெற்றது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மொகலா கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் அய்யனாரை (23) என்பவரை (ஆகஸ்ட் 11) கைது செய்தனர்.
News August 12, 2025
பெரம்பலூர்: வாகனத்திற்கு தேவையில்லாமல் Fine வருதா?

பெரம்பலூர் மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா? அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <
News August 12, 2025
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டம்

பெரம்பலூரில் பள்ளிச் செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியா்களும், அங்கன்வாடி பணியாளா்களும் வீடு, வீடாகச் சென்று குடற்புழு மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு ஆக.,18ம் தேதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இம்மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் களையப்பட்டு, குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும் என கூறப்படுகிறது.