News August 9, 2025
திருப்பத்தூர்: தேவையற்றை மெஸேஜ் வருகிறதா?

திருப்பத்தூர் மாவட்ட மக்களே உங்கள் செல்போனுக்கு மிகப் பெரிய பரிசுத் தொகை விழுந்துள்ளதாகவும், பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் வரும் செய்திகளை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவலர்கள் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அப்படி யாரேனும் உங்களை தொடர்பு கொண்டால் 1930 என்ற இந்த எண்ணிற்கோ அல்லது இந்த <
Similar News
News August 10, 2025
திருப்பத்தூரில் இன்று பாரம்பரிய கண்காட்சி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பிரியா மஹாலில் இன்று (ஆக.10) ஆம்பூர் மரபுசார் பாரம்பரிய அரிசி மற்றும் விதைகள் கண்காட்சி நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி இலவசம். கண்காட்சியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி, இயற்கை வேளாண்மை விற்பனையகங்கள், மூத்த முன்னோடி ஆளுமைகளின் சிறப்புரை, பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 10, 2025
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 1448 பேர் பயனடைந்தாக அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (09) நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் 230 அமைப்பு சாரா தொழிலாளர்கள், 95 தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட 1448 நபர்கள் பயனடைந்துள்ளனர். இதில் 149 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 23 நபர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
News August 10, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக.9) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.