News August 9, 2025
குமரி: காவல் அதிகாரிகள் பதவி உயர்வு

குமரி மாவட்டத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்று இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதில் எஸ்.பி.சி.ஐ.டி பரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் பதவி உயர்வு பெற்று தென் மண்டலத்திற்கு விரைவில் பணி மாற்றம் செய்யப்படுகிறார். இதேபோல குமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ஜாண் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் மேற்கு மண்டலத்திற்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
Similar News
News August 10, 2025
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஹிம்லர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளராக இன்று அறிவித்தார். மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஹிம்லர் ஆரம்ப காலம் தொட்டே நாம் தமிழர் கட்சியில் முழு ஈடுபாட்டுடன் இயங்கி வருகிறார். இவர் சிறந்த பேச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 10, 2025
குமரியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

தமிழ்நாடு தனியார் வேலை இணையம் சார்பில் கன்னியாகுமரியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் Duty Manager பிரிவில் 50 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 8-35 வயதிற்குட்பட்ட ஆண்கள் பங்கேற்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.15,000 – ரூ.25,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <
News August 10, 2025
திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க கோரிக்கை

ஆக.10 திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் இந்த ரயில் வரும் நிலையிலும், நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு பகல் நேரங்களில் ரயில் போக்குவரத்து இல்லாத சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.