News August 9, 2025
தென்காசி அருகே கரடியை தேடும் ட்ரோன்

புளியங்குடி பகுதியில் விவசாயி பணிக்கு சென்ற பெண்களை கரடி கடித்து படுகாயம் அடைந்த நிலையில் கரடியை பிடிக்க 3ஆவது நாளாக வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மாவட்ட வனத்துறை அலுவலர் அகில் நல்ல தம்பி தலைமையில் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு 3ஆவது நாளாக கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
Similar News
News August 10, 2025
மகளிர் சுய குழுக்களின் வாரசந்தை

தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் குழுக்களின் இயற்கை சந்தை இன்று காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை பொட்டல் புதூர் பொன் நகர் அருகே வார சந்தையில் நடைபெறுகிறது. இதில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாட்டு காய்கறிகள் கீரை வகைகள் பழங்கள் அரிசி சிறுதானிய உணவுகள் தானியங்கள் செக்கு எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
News August 10, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (ஆகஸ்ட் 9) தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம் தென்காசி புளியங்குடி சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல்துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
ஆகஸ்ட் 15ம் தேதி கருப்புக் கொடி போராட்டம் அறிவிப்பு

பழைய குற்றாலம் அருவியை விவசாயிகளுடைய பயன்பாட்டிற்காக 24 மணி நேரமும் திறக்க வேண்டும். மீண்டும் பொதுப்பணித்துறை உடைய கட்டுப்பாட்டிற்கு அருவியை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் வரும் ஆகஸ்ட் 15 அன்று மலையோர கிராம பகுதிகளில் கருப்புக்கொடி கட்டிப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.