News August 9, 2025
விழுப்புரத்தில் போலி பணி நியமன ஆணை வழங்கிய 3 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த 3 பேர் போலி பணி நியமன ஆணை வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் நாகர்கோவில் பல்கலைக்கழக கல்லூரிக்கு போலி பணி நியமன ஆணை வழங்கியதாக திண்டிவனத்தை சேர்ந்த செல்வக்குமார்(50), முகமது இஸ்மாயில்(51), பாபு(42) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலி அரசு பணி நியமன ஆணை, அரசாங்க முத்திரைகள், கணினி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 12, 2025
துப்பாக்கியால் சுட்ட வழக்கு – குண்டர் சட்டத்தில் அடைப்பு

விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தில் ஜூலை 12-ம் தேதி குடும்ப தகராறில் தனது மனைவி லாவண்யா, தாய் பச்சையம்மாள், மற்றும் சித்தப்பா மகன் கார்த்திக் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டதில் தம்பி கார்த்திக், மனைவி லாவண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வழக்கில் தென்னரசு என்பவர் கைது செய்து சிறையில் இருந்த நிலையில் இன்று(ஆக.12) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்
News August 12, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(ஆக.12) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
News August 12, 2025
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் செ.குன்னத்தூர் கிராமத்தில் மக்கள் வசிக்கும் தெருக்களில் கழிவுநீர் தேங்கி, குடிநீருடன் கலந்துள்ளதால் 30க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குன்னத்தூர் கிராம மக்கள் இன்று(ஆக.12) விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.