News August 9, 2025
உங்களுக்கு டாக்சிக் நண்பர் இருக்கிறாரா?

உங்களிடம் எப்போதும் நெகடிவ் விஷயங்களையே பேசி, அவநம்பிக்கை மட்டுமே விதைத்து வருபவர் தான் டாக்சிக் நண்பர். அவர், *எப்போதும் உங்களை மட்டம் தட்டுவார். *உங்களுடைய மைனஸை மட்டுமே சுட்டிக்காட்டி, பெரிது படுத்துவார். *எதையும் நெகடிவாக அணுகுவார். *தன்னைப் பற்றியே அதிகம் பேசுவார். *எப்போதும் புறணி, கிசுகிசு பேசுவார். *உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு, மாற்ற முயல்வார். இப்படியான நண்பர் உங்களுக்கு இருக்கிறாரா?
Similar News
News August 11, 2025
அதிமுக தலைவர்களை விமர்சிக்க கூடாது: திருமா

MGR, ஜெயலலிதாவை திருமாவளவன் விமர்சித்ததாக கூறி அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு விசிக தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், அதிமுக தலைவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் யாரும் பேச வேண்டாம் என கட்சியினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். எந்த தலைவர்களையும் அவமதிக்கும் நோக்கம் தனக்கில்லை என தெரிவித்த அவர், விமர்சனத்திற்கு விளக்கம் அளிக்க தயார் எனவும் கூறியுள்ளார்.
News August 11, 2025
மோடி வருகை திமுகவுக்கே சாதகம்: KN நேரு

திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பதாக EPS பகல் கனவு கண்டு கொண்டிருப்பதாக KN நேரு தெரிவித்துள்ளார். ஆனால், அதிமுக கூட்டணியில் பிரச்சனை உள்ளதால்தான் OPS வெளியேறி உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன் 40முறை மோடி தமிழகம் வந்த நிலையில் திமுக அபார வெற்றி பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அதனால் மோடி அடிக்கடி தமிழகம் வந்தால் திமுக கூட்டணி 2026-ல் அமோகமாக வெற்றி என்றும் கூறியுள்ளார்.
News August 11, 2025
ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ‘கூலி’

‘கூலி’ படத்தின் ப்ரீ புக்கிங் சில நாள்களுக்கு முன்பு அனைத்து இடங்களிலும் ஓபன் ஆனது. அந்த வகையில், இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இப்படம் ₹60 கோடிக்கும் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 14-ம் தேதி படம் ரிலீசாக உள்ள நிலையில், ரிலீஸுக்கு முன்னரே கண்டிப்பாக ₹100 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு யாரெல்லாம் வெயிட்டிங்?