News August 9, 2025
அந்த ஹீரோ டார்ச்சர் செய்தார்.. தமன்னா பகீர் புகார்

ஷூட்டிங்கில் தென்னிந்திய ஹீரோ ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தமன்னா குற்றஞ்சாட்டியுள்ளார். ஆரம்ப காலத்தில் நடித்த படத்தின் ஹீரோ, தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படி செய்யாதீர்கள் என கெஞ்சியும் அந்த ஹீரோ கேட்கவில்லை என்றும் தமன்னா தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத்தில் புகார் அளிப்பதாக கூறிய பிறகே அவர் விலகியதாகவும் கூறியுள்ளார். எந்த ஹீரோவாக இருக்கும்?
Similar News
News August 11, 2025
இந்தியாவின் அணையை தகர்ப்போம்: பாக்., தளபதி

அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், அங்கிருந்து இந்தியாவை மிரட்டியுள்ளார். சிந்து நதியின் குறுக்கே அணை கட்டினால், பாகிஸ்தானின் ஏவுகணைகள் அதை தாக்கி அழிக்கும் எனவும், சிந்து நதி ஒன்றும் இந்தியாவின் குடும்ப சொத்து கிடையாது என்றும் எச்சரித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் அணு ஆயுத நாடு என்பதை மறந்துவிட வேண்டாம் எனவும், தங்களிடம் ஏவுகணைகளுக்கு பஞ்சமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 11, 2025
மத்திய அமைச்சரை காணவில்லை… போலீஸில் புகார்

நடிகரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியை காணவில்லை என கேரள மாணவர் சங்க மாவட்ட தலைவர் கோகுல் போலீஸில் புகார் அளித்துள்ளார். திருச்சூர் MP – யான சுரேஷ் கோபியை 2 மாதங்களாக தொகுதியின் எந்த நிகழ்ச்சியிலும் பார்க்க முடியவில்லை என புகாரில் தெரிவித்துள்ளார். மேயர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சரால் கூட அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் கோகுல் குறிப்பிட்டுள்ளார்.