News August 9, 2025
வீட்டின் பூட்டை உடைத்து நான்கு பவுன் நகை கொள்ளை

தஞ்சாவூர் தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நான்கு பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வீரமணிண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 15, 2026
தஞ்சை: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சாவூர் மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 15, 2026
தஞ்சை அருகே விவசாயி தற்கொலை

ஒரத்தநாடு அருகே திருநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணப்பா. விவசாயியான இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி கண்ணப்பாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் விளைவாக, மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை தூக்கிட்டு செய்து கொண்டார். இதையடுத்து ஒரத்தநாடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 15, 2026
தஞ்சை ரூ.5 லட்சம் இலவச காப்பீடு.. APPLY NOW!

தஞ்சை மக்களே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!


