News August 9, 2025

குற்றால அருவியில் நீர்வரத்து குறைவு

image

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் தற்பொழுது சீசன் காலமாகும். தென்மேற்கு பருவமழை கடந்த 10 தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இல்லாததினால் காரணமாக அருவியில் நீர்வரத்து தற்போது குறைய தொடங்கியுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவியில் குளிப்பதற்கு திரண்டு வந்தனர்.

Similar News

News August 10, 2025

தென்காசி: ரயில்வேயின் 20% சூப்பர் OFFER!

image

அக்டோபர் 13 முதல் 26 ஆம் தேதி ரயிலில் குறிப்பிட்ட ஊருக்கு ஒரே வகுப்பில் பயணித்து அதே ரயிலில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை ரிட்டன் பயணம் டிக்கெட் செய்பவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி சலுகை அறிவிக்கபட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. செங்கோட்டை – சென்னை இடையே பயணிப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். SHARE பண்ணுங்க!

News August 10, 2025

தென்காசி: மணற்கேணி செயலி – ஆட்சியர் விளக்கம்

image

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் மணற்கேணி செயலி செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் பங்கேற்று, மாணவ மாணவர்களுக்கு மணற்கேணி செயலி குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News August 10, 2025

தென்காசி: பேருந்து தொடர்பாக புகார் அளிக்க.!

image

தமிழ்நாடு அரசின் விடியல் பேருந்து திட்டத்தில் எத்தனையோ பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இருப்பினும், ஒரு சில பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பெண்களை இழிவாக நடத்துவதும், பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பொது மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா 1800 599 1500 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். அல்லது 149 என்ற எண்ணிற்கும் அழைக்கலாம்.

error: Content is protected !!