News August 9, 2025
திமுகவை வீழ்த்த வேண்டும் என PMK பொதுக்குழுவில் தீர்மானம்

<<17350932>>பாமக பொதுக்குழு<<>> கூட்டத்தில் திமுகவுக்கு எதிராக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், விலைவாசி உயர்வு, மோசடி அரசு, போதைப்பொருள் அரசு என கடும் வார்த்தைகளுடன் கூடிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால், திமுக அணியில் PMK இல்லை என்பதை அன்புமணி உறுதி செய்துள்ளார் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News August 10, 2025
காது கொடுத்துக் கேளுங்கள்

குழந்தைகளை புரிந்துகொள்ள நாம் முயற்சிப்பதே இல்லை. மாறாக, அவர்கள் தான், நம்மை புரிந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறோம். இதனாலேயே குழந்தைகளை எப்போதும் குறை சொல்கிறோம். உங்கள் குழந்தைகள் உங்களிடம் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை எப்போதாவது காதுகொடுத்து கேட்டிருக்கிறீர்களா? அவர்கள் கூறும் சிறிய விஷயங்களை இப்போது நீங்கள் கேட்காவிட்டால், பின்னர் பெரிய விஷயங்களை அவர்கள் உங்களிடம் சொல்ல மாட்டார்கள்.
News August 10, 2025
தேசிய விருது பெற ஆசை இருக்கு: சிம்ரன்

நிச்சயம் ஒருநாள் தனக்கு தேசிய விருது கிடைக்கும் என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலம் நிச்சயம் விருது கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். ஒரு படத்துக்கு கதை நன்றாக இருந்தால் எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக அமையும் எனவும் சமீபத்தில் தான் நடித்த ‘குட் பேட் அக்லி’, ‘அந்தகன்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News August 10, 2025
நகை கடனை செலுத்த தவறினால் என்ன நடக்கும்?

வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால் நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன் உரிமையாளரிடம் முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏல இருப்பு விலை(RESERVE PRICE) நகையின் மதிப்பில் 90% இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85% ஆக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாள்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும். SHARE IT.