News August 9, 2025
SSMB29.. இயக்குநர் ராஜமெளலி கொடுத்த மெகா அப்டேட்!

இன்று மகேஷ் பாபு பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் பட அப்டேட் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஏமாற்றியுள்ளார். இன்று எந்த வித அப்டேட்டும் வராது என தெளிவாக குறிப்பிட்ட அவர், வரும் நவம்பரில் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என X தளத்தில் போஸ்டர் ஒன்றுடன் தெரிவித்துள்ளார். அதில், மகேஷ் பாபு கழுத்தில் உள்ள செயினில் சிவனின் திரிசூலம், உடுக்கை, காளை ஆகியவை இருக்கின்றன.
Similar News
News August 10, 2025
நகை கடனை செலுத்த தவறினால் என்ன நடக்கும்?

வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால் நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன் உரிமையாளரிடம் முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏல இருப்பு விலை(RESERVE PRICE) நகையின் மதிப்பில் 90% இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85% ஆக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாள்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும். SHARE IT.
News August 10, 2025
‘கூலி’ படத்தின் டிக்கெட் விலை பல மடங்கு உயர்வு

ரஜினி நடிப்பில் ஆக.14-ம் தேதி வெளியாகவுள்ள ‘கூலி’ படத்தின் டிக்கெட் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இப்படத்திற்கு ‘A’ சான்று தரப்பட்டுள்ளதால், தியேட்டருக்கு சிறுவர், சிறுமியர் வருகையும், குடும்பத்துடன் படம் பார்க்க வருவோர் எண்ணிக்கையும் குறையும். இதனால், வசூல் பாதிக்கப்படும் என்பதால், அரசு நிர்ணயத்த டிக்கெட் விலையை விட ₹300 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறதாம்.
News August 10, 2025
VIRAL: இதுக்கு பெயர்தான் லக்!

நமக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களை ஒருமுறையாவது பார்த்து விட மாட்டோமா? என தவம் கிடப்போம்! ஆனால், ஒருவருக்கு கோலியும், ஏ பி டிவில்லியர்ஸும் போன் செய்து தொல்லை கொடுத்துள்ளனர். சத்தீஸ்கரை சேர்ந்த மணிஷ், புதிதாக வாங்கிய சிம், ரஜத் பட்டிதரின் பழைய நம்பர். அந்த நம்பரில் தான், கோலியும், ABD-யும் போன் செய்துள்ளனர். விஷயமறிந்து படிதர் போலீசில் புகார் அளிக்க, அந்நபர் சிம்மை திருப்பி கொடுத்துள்ளார்.