News August 9, 2025

ராதாபுரம் இளைஞர் கொலை – குற்றாவளிகள் வாக்குமூலம்

image

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சங்கநேரியை சேர்ந்த பிரபுதாஸ் கோயம்புத்தூரில் வேலை செய்த போது, எங்களது உறவினர் பெண் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். கடந்த 6ம் தேதி பிரபுதாஸை பின் தொடர்ந்தோம் தொடர்ந்து பைக்கில் சென்ற போது அவரை வழிமறித்துக் கொலை செய்தோம் என கைதானவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Similar News

News August 10, 2025

ரக்ஷா பந்தன் சகோதரிகளுக்கு பாஜக தலைவர் நன்றி தெரிவிப்பு

image

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் திருவிழா நேற்று நாடு முழுவதும் வட இந்தியர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பெண்கள் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி இனிப்பு வழங்கி வாழ்த்து பெற்றனர். இதற்கு அவர் நன்றி தெரிவித்து தனது வலைதளத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

News August 10, 2025

நெல்லை சமூக நலத்துறை அதிகாரி மீது பாலியல் வழக்கு

image

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டாரத்தில் பெண் ஊழியருக்கு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட மகளிர் திட்ட சமூக நலத்துறை அதிகாரி இலக்குவன் மீது நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 10, 2025

ஆயுதங்கள் தயாரிக்க தடை – மாவட்ட காவல்துறை உத்தரவு

image

நெல்லை இரும்பு பட்டறைகளில் விவசாய பயன்பாட்டு ஆயுதங்களை தவிர அரிவாள், கத்தி உள்ளிட்ட அபாயகரமான ஆயுதங்களை தயாரிக்க நேற்று (ஆகஸ்ட் 9) திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தும் ஆயுதங்கள் தயாரிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

error: Content is protected !!