News August 9, 2025

பொதுவிநியோக திட்ட குறைதீர்ப்பு: சிறப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றவும், சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்கள் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளித்து பயனடைய மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Similar News

News August 10, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான 45 நாட்கள் இலவச சிறப்புப் பயிற்சிக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த, 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தகுதியானவர்கள். பயிற்சி காலத்தில் இலவச தங்குமிடம், உணவுடன், மாதம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை சம்பளத்துடன் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.

News August 10, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் இரவு ரோந்து பணி காவலர்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 09) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது

News August 9, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 8) 198.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பம்பர் டேமில் அதிகபட்சமாக 70.00 மி.மீ மழை பெய்துள்ளது. இதைத் தொடர்ந்து நெடுங்கல் 34.00 மி.மீ, ஊத்தங்கரை 28.0 மி.மீ, போச்சம்பள்ளி 21.80 மி.மீ, மற்றும் பர்கூரில் 21.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

error: Content is protected !!