News August 9, 2025
நாகை: மக்காசோள உற்பத்திக்கு மானிய தொகுப்பு

நாகை மாவட்டத்தில் மக்காசோளம் உற்பத்தியை பெருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மக்காசோள சாகுபடிக்கு வீரிய ஒட்டுரக விதைகள், திரவ உயிர் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இடுபொருட்கள், நானோ யூரியா ஆகியவை அடங்கிய ரூ.6000 மதிப்புள்ள தொகுப்பு வட்டார வேளாண் அலுவலகங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக நாகை வேளாண் இணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
நாகை: பெற்றோர்கள் கவனத்திற்கு! இதை தெரிஞ்சிக்கோங்க!

நாகை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅ குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க ! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News August 9, 2025
நாகையில் அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

நாகை மாவட்டம் நாகூர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிபவர் மாதவன்(44). இவர் நேற்று முன்தினம் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தலைமையாசிரியர் புனிதா கொடுத்த புகாரின்பேரில், நாகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மாதவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
News August 9, 2025
தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகை அவுரி திடலில் பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிய தேர்தல் ஆணைய நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில், அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள். மேலும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.