News August 9, 2025
சேலத்தில் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்!

சேலத்தில் இன்று (ஆக.9) ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்:
▶️ சூரமங்கலம் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி.
▶️உடையாப்பட்டி ஸ்ரீ சேக்கிழார் திருமண மண்டபம் உடையாபட்டி.
▶️மேட்டூர் சிவகாம சுந்தரி திருமண மண்டபம் மேட்டூர்.
▶️தலைவாசல் ஸ்ரீ அன்னபூர்ணா திருமண மண்டபம்.
▶️ நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வீரனூர்.
▶️ஓமலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காமலாபுரம். ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெற உள்ளது.
Similar News
News August 9, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 9) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News August 9, 2025
திருமண தடை நீக்கும் பேளூர் கோயில்!

சேலம் மாவட்டம் பேளூர் அமைந்துள்ளதுள்ளது, 1000 ஆண்டுகள் பழமையான தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் உள்ள சிவலிங்கமானது உளி படாமல் சுயம்புவாக தானே தோன்றியதால் இவர் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள கல்யாண விநாயகரை வழிபட்டால் நீண்ட நாள் திருமண தடை உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை மற்றவர்களுக்கும் SHARE செய்யவும்.
News August 9, 2025
8 மாதத்தில் சிறப்பான கூட்டணி அமையும் – ஈபிஎஸ்

“திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு உள்ளது. இன்னும் 8 மாதத்தில் கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது குறித்து செய்தியாளர்கள் பேச்சிலேயே தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது. அந்த 8 மாதத்தில் சிறப்பான கூட்டணி அமையும். அப்போது அனைவருக்கும் தெரிவிப்போம்” என சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.