News August 9, 2025
ராணிப்பேட்டையில் வீரமரணம் அடைந்த சோழன்

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் தான் கி.பி 949ல் முதலாம் பராந்தகனின் மகன் ராஜாதித்யனுக்கும், ராஷ்டிரகூடர்களின் கங்க இளவரசர் பூட்டுகனுக்கும் இடையே போர் ஏற்பட்டது. ஆதித்த கரிகாலனை போல வீரமிக்க சோழ இளவரசனான ராஜாதித்யன் இந்த போரில் வீரமரணம் அடைந்தான். இவரது வீரத்தை போற்றும் விதமாக தான் அரக்கோணம் CISF ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் ராஜாதித்ய சோழன் (RTC), தக்கோலம் என மறுபெயரிடப்பட்டது. ஷேர் பண்ணுங்க
Similar News
News August 9, 2025
ராணிப்பேட்டை: மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

ராணிப்பேட்டையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் TRAINEE பணிக்கு 100 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதிக்குள் <
News August 9, 2025
ராணிப்பேட்டை காவல்துறை விழிப்புணர்வு செய்தி

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் தினந்தோறும் சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்படுகிறது. அதன்படி இன்று வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்ட முயற்சிக்காதீர்கள் உங்களுக்காக உங்கள் குடும்பம் காத்திருக்கிறது மதுபோதையில் பயணம் செய்வதை தவிர்ப்போம்.. பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வோம்…என விழிப்புணர் செய்தியை வெளியிட்டுள்ளது.
News August 9, 2025
ராணிப்பேட்டையில் குடிமைப்பணிகள் தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பபணிகள் குடிமைப்பணிகள் தேர்வுகள் வருகிற 17, 18-ந் தேதி ஆகிய 2 நாட்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 தேர்வு கூடங்களில் நடைபெற உள்ளது. தேர்வினை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 781 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்விற்காக கூடுதல் சிறப்பு பஸ் வசதிகள் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்