News August 9, 2025
TN அரசு செய்துள்ளது NEP-யின் Copy கொள்கை: நயினார்

TN அரசு வெளியிட்டுள்ளது மாநில கல்விக் கொள்கை அல்ல தேசிய கல்விக் கொள்கையின் காப்பி(Copy) கொள்கை என நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். மாணவர்களின் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையில்(NEP) மும்மொழி கொள்கை மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாக கூறினார். இதே கருத்தை அக்கட்சியின் மூத்த தலைவர்களான தமிழிசை, <<17341526>>அண்ணாமலை<<>> உள்ளிட்டோரும் கூறியுள்ளனர்.
Similar News
News August 9, 2025
உங்களுக்கு டாக்சிக் நண்பர் இருக்கிறாரா?

உங்களிடம் எப்போதும் நெகடிவ் விஷயங்களையே பேசி, அவநம்பிக்கை மட்டுமே விதைத்து வருபவர் தான் டாக்சிக் நண்பர். அவர், *எப்போதும் உங்களை மட்டம் தட்டுவார். *உங்களுடைய மைனஸை மட்டுமே சுட்டிக்காட்டி, பெரிது படுத்துவார். *எதையும் நெகடிவாக அணுகுவார். *தன்னைப் பற்றியே அதிகம் பேசுவார். *எப்போதும் புறணி, கிசுகிசு பேசுவார். *உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு, மாற்ற முயல்வார். இப்படியான நண்பர் உங்களுக்கு இருக்கிறாரா?
News August 9, 2025
டாக்சிக் நண்பரை சமாளிப்பது எப்படி?

டாக்சிக் நண்பரை அடையாளம் கண்டபின் *அவர்களுக்கான லிமிட்டை முடிவு செய்யுங்கள் *உங்களை பாதிக்கும் நட்பை முறித்துக்கொள்ள உங்களுக்கு எப்போதும் உரிமை உள்ளது. ஆகவே, எல்லை மீறினால் விலகத் தயங்காதீர் *எதையும் நேருக்கு நேர் சொல்லி விடுங்கள் *உங்களுக்கென தனியே நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள் *மீண்டும் அவருடன் தொடர்பை புதுப்பிக்க விரும்பினால், ஒன்றுக்கு இருமுறை யோசியுங்கள் *புதிய நண்பர்களை கண்டறிந்து பழகுங்கள்.
News August 9, 2025
கடன் வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு அறிவிப்பு

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை 2026 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.