News August 9, 2025
குமரி: பூம்புகார் படகு சேவை START..!

குமரியில், கண்ணாடி இழை பாலம் திறந்ததையடுத்து, இதுவரை 16 லட்சம் பயணிகள் குமரிக்கு வருகைதந்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பொருட்டு, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகத்தின் சார்பில், படகு பயணம் மேற்கொள்ள ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது.<
Similar News
News August 9, 2025
குமரி: எல்லாம் நிறைவேறும் தாணுமாலய சுவாமி கோயில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் உள்ளது. இங்கு சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கே அருள்பாலிப்பதால் இங்கு எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். திருமணம், குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் வேண்டி இங்கு நிறைய பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். இது தேவேந்திரன் சாபம் நீங்கிய தலம் என்றும் நம்பப்படுகிறது.
News August 9, 2025
குமரியில் 633809 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை – ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 11 மற்றும் 18 ஆகிய இரண்டு தினங்கள் குடற்புழு நீக்க மாத்திரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் ஒன்று முதல் 19 வயதுடைய 558766 குழந்தைகளுக்கும் 20 முதல் 30 வயதுடைய 75043 பெண்கள் என மொத்தம் 633809 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். 2893 பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.
News August 9, 2025
குமரியில் இலவச தையல் மிஷின் APPLY பண்ணுங்க!

குமரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலரை 04652-235451 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.