News April 6, 2024
நயனை சந்தித்தது எப்படி? மனம் திறந்த விக்னேஷ் சிவன்

தனுஷ் மூலமாகவே நயன்தாரா அறிமுகமானதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் மனம் திறந்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க ஒரு தயாரிப்பாளராக தனுஷ் பரிந்துரைத்ததாக கூறினார். தனுஷ் உதவியுடன் நயன்தாராவை சந்தித்த விக்னேஷ் சிவன், கதை சொல்லி ஓகே வாங்கி இருக்கிறார். நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டதாலேயே விஜய் சேதுபதி அப்படத்தில் கமிட் ஆனதாகவும் கூறினார்.
Similar News
News March 21, 2026
திமுக கூட்டணி உடைகிறதா?

CPM-ற்கு 5 சீட்களை மட்டுமே ஒதுக்க முடியுமென திமுக கறார் காட்டுவதால், அக்கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. 6 சீட்களை ஒதுக்க திமுக தவறினால் தனித்து போட்டியிடலாம் என CPM கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவாக வேல்முருகனை தொடர்ந்து, CPM-மும் கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் இருப்பது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
News March 21, 2026
ஒரு கிலோ விலை ₹10,000… எது தெரியுமா?

விலை உயர்ந்த நட்ஸ் என்றால் முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவை தான் நினைவுக்கு வரும். ஆனால் உண்மையில் சில்கோசா என்ற பைன் விதைகள் தான் விலை உயர்ந்த நட்ஸாக உள்ளது. ‘வெள்ளைத் தங்கம்’ எனப்படும் இந்த நட்ஸ் ஒரு கிலோ ₹7,000 – ₹10,000 வரை விற்பனையாகிறது. இமாச்சல் & ஜம்மு காஷ்மீரின் உயரமான மலை பகுதிகளில் மட்டுமே கிடைப்பதும், அதன் செறிவான சத்துகளும் தான் இது காஸ்ட்லியாக இருப்பதற்கு காரணம்.
News March 21, 2026
பனை தொழிலாளர்களா, பயங்கரவாதிகளா? சீமான்

கள் இறக்கிய பனை தொழிலாளர்களை பயங்கரவாதிகள் போல உள்ளாடையுடன் திருச்சி போலீஸார் சிறையில் அடைத்திருப்பது கொடுங்கோன்மை என சீமான் கண்டித்துள்ளார். கள்ளை முறையான ஆய்வுக்கு உட்படுத்தாமல் நச்சு கலந்த கள் என போலீஸ் கூறுவதில் இருந்தே முற்றிலும் இது புனையப்பட்ட நாடகம் என்பது உறுதியாகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கள் இறக்க தடை இல்லாதபோது, TN-ல் மட்டும் தடை எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


