News August 9, 2025
ஆடி மாத சனிக்கிழமையில் யாரை வழிபடலாம்?

எவருக்குமே பயப்படாதவர்களும் கூட, சனீஸ்வரருக்குப் பயப்படுவார்கள். அதனால்தான் சனிபகவானை ஈஸ்வரப் பட்டம் சேர்த்து சனீஸ்வரர் என அழைக்கிறோம். ஆடி மாத சனிக்கிழமையில் சனீஸ்வரரை வணங்கி காகத்துக்கு உணவளித்தால், சனி கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என நம்பப்படுகிறது. நம் முன்னோர்களின் வடிவமாகத் திகழும் காகத்துக்கு உணவிடுவதால் அவர்களும் நம்மை ஆசீர்வதிப்பார்கள்.
Similar News
News August 9, 2025
திமுகவை வீழ்த்த வேண்டும் என PMK பொதுக்குழுவில் தீர்மானம்

<<17350932>>பாமக பொதுக்குழு<<>> கூட்டத்தில் திமுகவுக்கு எதிராக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், விலைவாசி உயர்வு, மோசடி அரசு, போதைப்பொருள் அரசு என கடும் வார்த்தைகளுடன் கூடிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால், திமுக அணியில் PMK இல்லை என்பதை அன்புமணி உறுதி செய்துள்ளார் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
News August 9, 2025
அன்புமணி தலைவராக தொடர்வார் என தீர்மானம்

2026 ஆகஸ்ட் வரை பாமகவின் தலைவராக அன்புமணி தொடர்வார் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் பதவிக்காலமும் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
News August 9, 2025
மாதம் 3 முறை இலவசம்.. 4-வது முறை ₹150 வசூல்.. ICICI

புதிதாக கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு 3 முறை மட்டுமே இலவச பரிவர்த்தனை; அதற்குமேல் ₹150 வசூலிக்கப்படும் என <<17350157>>ICICI <<>>அறிவித்துள்ளது. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள ICICI வங்கி அல்லாத ATMகளில் மாதம் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். அதன்பிறகு, ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் ₹23, நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ₹8.5 வசூலிக்கப்படும்.