News August 9, 2025
போலி வாக்காளர்களால் திமுக வெற்றி: இபிஎஸ் சாடல்

போலி வாக்காளர்களால் தான் சென்னை மாநகராட்சியில் திமுக வெற்றி பெறுவதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்து கொடுத்ததாகவும், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியில் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திமுகதான் போலி வாக்காளர்களை சேர்ப்பதில் மும்முரமாக இருப்பதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News August 9, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪தாம்பரத்தில் <<17350203>>புதிய <<>>GH-யை திறந்து வைத்த CM ஸ்டாலின்
✪எம்ஜிஆரை <<17349030>>விமர்சித்த <<>>திருமாவளவன்
✪தங்கம் <<17348877>>விலை <<>>சரிவு.. சவரனுக்கு ₹200 குறைவு
✪எல்லையில் <<17348912>>மீண்டும் <<>>மோதல்.. 2 வீரர்கள் மரணம்
✪புதிய <<17347827>>வரிவிதிப்புகளால் <<>>கோடி கோடியாக பணம்: டிரம்ப் ✪CSK-ல் <<17341504>>இருந்து <<>>விலகும் அஸ்வின்.. ரசிகர்கள் அதிர்ச்சி
News August 9, 2025
இனி Minimum Balance ₹50,000.. அதிர்ச்சி கொடுத்த ICICI

புதிய வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு ICICI அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச மாதாந்தர இருப்புத் தொகையை (Avg.Minimum Balance) நகர்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ₹50,000, சிறு நகரங்களுக்கு ₹25,000, கிராமப்புற பகுதிகளுக்கு ₹10,000 ஆக உயர்த்தியுள்ளது. இந்த நடைமுறை ஆக.1 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், ஏற்கெனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய AMB தொடரும்.
News August 9, 2025
தாம்பரத்தில் புதிய GH-யை திறந்து வைத்த CM ஸ்டாலின்

சென்னை, தாம்பரத்தில் ₹110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன GH-யை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். அத்துடன் ₹7.24 கோடி கட்டப்பட்ட அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஹாஸ்பிடல், புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார். இதனால், சென்னையின் புறநகர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.