News August 9, 2025
2026 T20 WC வரை இவர்கள்தான் ஆஸி., ஓபனிங் பேட்ஸ்மென்கள்

2026 டி20 உலகக்கோப்பை வரை மிட்செல் மார்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தான் தங்கள் அணியின் ஓபனிங் பேட்ஸ்மென்கள் என ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஜோடி இன்னும் டி20 -களில் ஓபனிங் இறங்கி பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்றாலும், ஒருநாள் போட்டிகளில் தாங்கள் கெத்து என நிரூபித்துள்ளது. வெறும் 5 இன்னிங்ஸ்களில் 70.50 சராசரியுடன் 282 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை இந்த ஜோடி அடித்துள்ளது.
Similar News
News December 8, 2025
வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2014-ல் ₹62-ஆக இருந்த ரூபாய் மதிப்பு தற்போது ₹90-க்கும் கீழ் சென்றுள்ளது. மேலும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், இறக்குமதி பொருள்களின் விலையில் எதிரொலிக்கும். குறிப்பாக, கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை, சமையல் எண்ணெய் விலை, மின்னணு பொருள்கள், செல்போன், லேப்டாப், மருந்துகள், கார்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
News December 8, 2025
புடினை தொடர்ந்து இந்தியா வரும் ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில்தான் புடின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விசிட்டில் PM மோடி அவரிடம் உக்ரைன் உடனான போர் குறித்து பேசியதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து ஜெலன்ஸ்கியும் இந்தியா வரவுள்ளதால், உக்ரைன் தரப்பு கோரிக்கைகளை PM கேட்டறியலாம். இதன்பிறகு, அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.
News December 8, 2025
ஸ்டாலினின் இந்து மத வெறுப்பு: வானதி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனது ஆழ்மனதில் இருக்கும் இந்து மத வெறுப்பை ஸ்டாலின் வெளிப்படுத்துகிறார் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என 1920-ல் இருந்தே நீதிமன்றத்தில் உரிமை போராட்டம் இருந்து வருவதாக கூறிய அவர், அப்போது பாஜகவும் இல்லை, RSS-ம் இல்லை என தெளிவுப்படுத்தியிருக்கிறார். அத்துடன், 1920-ல் நடந்ததை CM அரசியல் என்கிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


