News August 9, 2025
ராமருக்கு போல் சீதாவுக்கும் பிரமாண்ட கோயில்: அமித்ஷா

பீஹார் மாநிலத்தில் சீதாதேவியின் பிறப்பிடமாக கருதப்படும் சீதாமர்ஹியில் உள்ள புனவ்ராதாம் பகுதியில் ஜானகி மந்திர் கோயில் உள்ளது. சீதாதேவியின் கோயிலாக இது கருதப்படுகிறது. அயோத்தியாவில் ராமருக்கு பிரம்மாண்ட ஆலயம் அமைக்கப்பட்டது போல், தற்போது இக்கோயிலை ₹882.87 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்வதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் அமித்ஷா பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
Similar News
News August 9, 2025
யாருடனும் உங்களை ஒப்பிடாதீர்கள்…

நாம் பொதுவாகவே யாருடனாவது நம்மை ஒப்பிட்டுக்கொள்வோம். நம் கவலைகளில் பாதி, இந்த ஒப்பிடல் மூலம் தான் வரும். உங்களைவிட ஒருவர் வெற்றிகரமாக இருக்கிறார் என்றால் அவருடைய சூழல், குடும்ப வழிகாட்டல்கள் என அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதனால் நீங்கள் ஒன்றும் குறைவானவரில்லை. முதல் படியில் இருந்து நீங்கள் முன்னேறி வருவதற்கு மகிழ்ச்சிக் கொள்ளுங்கள். உங்களாலும் முடியும்!
News August 9, 2025
2025 வருமான வரி மசோதா வாபஸ்

கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்திய 2025 வருமான வரி மசோதாவை, நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளார். அதேநேரம், வரி செலுத்துவோருக்கு பயன் தரும் வகையில் ஆக.11-ல் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. TDS, TCS விரைவாகவும், எளிதாகவும் மாற்றும் வகையிலும், வீட்டுக் கடனுக்கான வட்டி டிடக்ஷனில் கூடுதல் பலன் போன்ற பல மாற்றங்களுடன் புதிய மசோதா தாக்கலாகிறது.
News August 9, 2025
TN அரசு செய்துள்ளது NEP-யின் Copy கொள்கை: நயினார்

TN அரசு வெளியிட்டுள்ளது மாநில கல்விக் கொள்கை அல்ல தேசிய கல்விக் கொள்கையின் காப்பி(Copy) கொள்கை என நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். மாணவர்களின் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையில்(NEP) மும்மொழி கொள்கை மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாக கூறினார். இதே கருத்தை அக்கட்சியின் மூத்த தலைவர்களான தமிழிசை, <<17341526>>அண்ணாமலை<<>> உள்ளிட்டோரும் கூறியுள்ளனர்.