News August 9, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு படும் ஆர்வலர்களுக்கு தமிழ் செம்மல் விருது வழங்கப்பட உள்ளதால் தகுதி உடையவர்கள் 29.8.25-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பங்களை www.tamilvalarchithurai.com பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (அ) தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
பெரம்பலூரில் வாகன ஏலம்! போலீசார் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட 43 வாகனங்கள் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. 40 இருசக்கர வாகனங்கள், 1 நான்கு சக்கர வாகனம் மற்றும் 2 ஆறு சக்கர வாகனங்கள் என மொத்தம் 43 வாகனங்கள் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி காலை 10 மணிக்கு பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி பொது ஏலம் விடப்படவுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News August 9, 2025
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 40 இருசக்கர வாகனங்கள் ஒரு 4 சக்கர வாகனம் மற்றும் 2 ஆறு சக்கர வாகனங்கள் என மொத்தம் 43 வாகனங்களை 14.8.2025-ம் தேதி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 7904136038, 9498162279, 9787658100 என்ற எண்ணை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 8, 2025
மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்பி அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தார்.