News August 9, 2025
புதுகை விநாயகர் சிலை, ஆட்சியர் அறிவுறுத்தல்

புதுகை மாவட்டத்தில் விநாயகர் சிலை செய்வோர் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைக் கொண்டு சிலைகளை செய்ய வேண்டும், சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிமணிகள் பூஜை பொருட்கள் பூக்கள், எல்இடி விளக்கு உள்ளவற்றை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், தெர்மாகோல், ரசாயனம் கொண்ட சாயங்கள், எண்ணை வண்ணப் பூச்சுகளை, ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகளை பயன்படுத்தக் கூடாது என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
புதுக்கோட்டை: குடும்ப அட்டையில் பிரச்னையா?

பொது வினியோக திட்டத்தில் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது வினியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் போன்றவைகளை மாற்றிக்கொள்ளவும். இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்
News August 9, 2025
புதுகை:இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம்.பொதுமக்கள் இரவு நேர அவசர உதவிக்காக எண்களை பயன்படுத்தி கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News August 8, 2025
அரசு மீன் பண்ணையில் மீன் குஞ்சுகள் விற்பனை கலெக்டர் அருணா தகவல்

புதுகை மாவட்டத்தில் தட்டாமலைபட்டி, கருவிடைசேரி, குருங்களூர், அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில், தற்பொழுது பருவமழை காரணமாக இந்திய பெருங்கெண்டை, கட்லா, ரோகு, மிர்கால், மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. மீன் வளர்ப்பு கண்மாய், குளங்களில் அரசு விலையில் மீன் குஞ்சுகள் வளர்க்க மீன்வள சார் ஆய்வாளர்களை 8248970355, 9751616866 தொடர்பு கொள்ள கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.