News August 9, 2025
திருச்சியில் சிறப்பு குறைதீர் முகாம்கள்

திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களில் சனிக்கிழமை (10.08.2025) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல்,திருத்தங்கள், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பம் என அந்தந்த பகுதிக்குரிய கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் முகாம்கள் நடைபெறும்..
Similar News
News August 9, 2025
திருச்சி: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு !

திருச்சி மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <
News August 8, 2025
திருச்சி: ஆடி மாதம், கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க !

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
✅.இறை வழிபாடு
✅.நேர்த்திக்கடன்கள்
✅.தாலி சரடு மாற்றுதல்
✅.ஆடிப்பெருக்கு வழிபாடு
✅.கூழ் படைத்தல்
✅.விவசாயம்
செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!
News August 8, 2025
திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரூ.86 லட்சம் அபராதம் வசூல்

திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் டிக்கெட் இன்றி பயணம் செய்தது, முன் பதிவு இல்லா டிக்கெட் வைத்துக் கொண்டு உயர்தர வகுப்புகளில் பயணம் செய்தது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக லக்கேஜ் எடுத்து செல்வது உள்ளிட்ட வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 17,065 பயணிகளிடம் இருந்து ரூ.86,30,076 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.