News August 9, 2025
மீண்டும் சீரியலில் ஸ்மிருதி… ஒரு எபிசோடுக்கு ₹14 லட்சமா!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் ரீ-என்ட்ரி கொடுத்துவிட்டார். தற்போது ‘Kyunki Saas Bhi Kabhi Bahu Thi Season-2’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதில் தனது நடிப்புக்கு அவர் ஒரு எபிசோடுக்கு ₹14 லட்சம் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிவி சீரியலில் இது நடிகைக்கான அதிகபட்ச சம்பளம் என்கின்றனர். ஆனால், இதுகுறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.
Similar News
News August 9, 2025
5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் IMD மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தென்மேற்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று 35-45 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 9, 2025
பொதுக்குழு விவகாரம்.. ராமதாஸ் மேல்முறையீடு

அன்புமணி பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராமதாஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆக.17-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக ராமதாஸ் அறிவித்து இருந்தார். உடனே, அவருக்கு முன்பே வரும் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக அன்புமணி அறிவித்த நிலையில், அதற்கு தடைகேட்டு ராமதாஸ் கோர்ட்டுக்கு சென்றார்.
News August 9, 2025
வறுமை இல்லாத மாநிலம் தமிழகம்: CM ஸ்டாலின்

வறுமை இல்லாத மாநிலமாக தமிழகம் இருப்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு விழாவில் பேசிய அவர், அயோத்தியின் பெருமையை சொல்லும் போது கூட, காவிரி நாட்டுடன் கம்பர் ஒப்பிட்டதாகவும், கம்பர் கண்ட கனவு படி தமிழகம் பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இத்தகைய மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதும் அவருக்கு ஆற்றும் தொண்டு தான் என்றும் தெரிவித்துள்ளார்.