News August 9, 2025
ராமநாதபுரம் இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஆகஸ்ட் 8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.
Similar News
News December 7, 2025
ராம்நாடு: தனியார் உர கடைகளுக்கு கலெக்டர் எச்சரிகை

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் பெய்த 921 மிமீ மழையை பயன்படுத்தி 1,09,600 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெற்பயிருக்கு மேலுரமிட தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா உரம் கேட்கும் விவசாயிகளிடம் இதர உரங்கள், இயற்கை உரங்கள், உயிர் ஊக்கிகள் வாங்க கட்டாயப்படுத்தினால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 985 படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (டிச.06) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News December 6, 2025
இராமநாதபுரம் கிராமத்திற்கு ரூ.1 கோடி பரிசு

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகையுடன் கூடிய, சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டாரத்தில் அமைந்துள்ள மேலமடை ஊராட்சி சமூக நல்லிணக்கத்திற்கான விருதிற்கு தேர்வு செய்ய்யப்பட்டுள்ளது.


