News August 8, 2025
அதிமுக ஆப்ஷனை மூடிய விஜய்: 3 காரணங்கள்

அதிமுகவை இதுநாள் வரை மென்மையாக அணுகிவந்த விஜய், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணி ஆப்ஷனை விஜய் ஒதுக்கிவைத்ததற்கான 3 முக்கிய காரணங்கள். *EPS பலம்பெறுவது எதிர்காலத்தில் தவெக வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் *திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது பாஜக, நாதக வளர்ந்தது போல தவெகவும் வளரும் * நடுநிலை வாக்குகளை இழக்க நேரிடும் என்ற முன்னெச்சரிக்கை. விஜய்யின் முடிவு சரியா?
Similar News
News August 9, 2025
பொதுக்குழு விவகாரம்.. ராமதாஸ் மேல்முறையீடு

அன்புமணி பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராமதாஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆக.17-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக ராமதாஸ் அறிவித்து இருந்தார். உடனே, அவருக்கு முன்பே வரும் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக அன்புமணி அறிவித்த நிலையில், அதற்கு தடைகேட்டு ராமதாஸ் கோர்ட்டுக்கு சென்றார்.
News August 9, 2025
வறுமை இல்லாத மாநிலம் தமிழகம்: CM ஸ்டாலின்

வறுமை இல்லாத மாநிலமாக தமிழகம் இருப்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு விழாவில் பேசிய அவர், அயோத்தியின் பெருமையை சொல்லும் போது கூட, காவிரி நாட்டுடன் கம்பர் ஒப்பிட்டதாகவும், கம்பர் கண்ட கனவு படி தமிழகம் பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இத்தகைய மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதும் அவருக்கு ஆற்றும் தொண்டு தான் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
ஆடி மாத சனிக்கிழமையில் யாரை வழிபடலாம்?

எவருக்குமே பயப்படாதவர்களும் கூட, சனீஸ்வரருக்குப் பயப்படுவார்கள். அதனால்தான் சனிபகவானை ஈஸ்வரப் பட்டம் சேர்த்து சனீஸ்வரர் என அழைக்கிறோம். ஆடி மாத சனிக்கிழமையில் சனீஸ்வரரை வணங்கி காகத்துக்கு உணவளித்தால், சனி கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என நம்பப்படுகிறது. நம் முன்னோர்களின் வடிவமாகத் திகழும் காகத்துக்கு உணவிடுவதால் அவர்களும் நம்மை ஆசீர்வதிப்பார்கள்.