News August 8, 2025

கவின் வழக்கு: ஆக.17ம் தேதி புதிய தமிழகம் போராட்டம்

image

கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 17-ம் தேதி புதிய தமிழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ஆறுமுகமங்கலம் சென்று கவின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த கிருஷ்ணசாமி, அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்திலும் பங்கேற்றார். கவின் கொலைக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

Similar News

News August 9, 2025

டிரம்ப் – புடின் சந்திப்பு தேதி உறுதியானது

image

அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 15-ம் தேதி ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் இருவரும் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைனை நேட்டோவில் இணைக்கக் கூடாது மற்றும் நேட்டோ படைகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே ரஷ்யாவின் கோரிக்கையாக உள்ளது.

News August 9, 2025

ஆகஸ்ட் 9: வரலாற்றில் இன்று

image

*உலக பழங்குடிகள் நாள். *1329 – இந்தியாவின் முதலாவது கிறித்தவ மறைமாவட்டம் கேரளத்தில் கொல்லம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. யோர்தானஸ் என்ற பிரான்சியர் முதலாவது பேராயராக நியமிக்கப்பட்டார். *1892 – தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார். *1991 – விடுதலைப் புலிகளின் ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இந்த போரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

News August 9, 2025

2026 T20 WC வரை இவர்கள்தான் ஆஸி., ஓபனிங் பேட்ஸ்மென்கள்

image

2026 டி20 உலகக்கோப்பை வரை மிட்செல் மார்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தான் தங்கள் அணியின் ஓபனிங் பேட்ஸ்மென்கள் என ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஜோடி இன்னும் டி20 -களில் ஓபனிங் இறங்கி பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்றாலும், ஒருநாள் போட்டிகளில் தாங்கள் கெத்து என நிரூபித்துள்ளது. வெறும் 5 இன்னிங்ஸ்களில் 70.50 சராசரியுடன் 282 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை இந்த ஜோடி அடித்துள்ளது.

error: Content is protected !!