News August 8, 2025

அபாகஸ் பயிற்சியினை கலெக்டர் தொடக்கி வைத்தார்

image

தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அபாகஸ் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று (08.08.2025) குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்தார்

Similar News

News August 19, 2025

தர்மபுரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆக.19) தர்மபுரி நகராட்சியில் செங்குந்தர் மண்டபம், அரூர் பேரூராட்சியில் பொன் கற்பகம் மண்டபம், தர்மபுரி வட்டாரத்தில் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம் வட்டாரத்தில் கூத்தபாடி பெரியார் மண்டபம், ஏரியூர் வட்டாரத்தில் ஜக்கம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம், பாலக்கோடு வட்டாரத்தில் பாடி சமுதாய கூடம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. SHARE

News August 19, 2025

நாளை தருமபுரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

தருமபுரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை நடைபெற உள்ளது. இந்த முகாம் தருமபுரி செங்குந்தர் திருமண மண்டபம், அரூர் பொன் கற்பகம் திருமண மண்டபம், இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம் கூத்தப்பாடி பெரியார் திருமண மண்டபம், ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஜக்கம்பட்டி மற்றும் பாலக்கோடு சமுதாய கூடம் பாடி ஆகிய இடங்களில் நடைபெறும்.

News August 18, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக M. ரவிச்சந்திரன்
நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி லதா, அரூர் ஜெய் கீர்த்தி, பென்னாகரம் செல்வமணி மற்றும் பாலக்கோடு வெங்கட்ராமன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!