News April 6, 2024
விபத்தில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனைகள்

பாக்., கிரிக்கெட் வீராங்கனைகள் பயணித்த கார் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் பிஸ்மா மரூப், குலாம் பாத்திமா ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக பாக்., கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், இவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும், மருத்துவ அறிக்கைக்குப் பின்னே இவர்கள் போட்டியில் பங்கேற்பது குறித்து தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News July 6, 2025
கமல்ஹாசனுக்கு அதிரடி தடை: கர்நாடக கோர்ட்

இனி கன்னட மொழி, கலாசாரம், இலக்கியம் குறித்துப் பேச நடிகர் கமல்ஹாசனுக்கு பெங்களூரு கோர்ட் தடை விதித்துள்ளது. தக் லைஃப் பட புரமோசனின்போது தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என பேச அது சர்ச்சையானது. இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்புகள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதன் விளைவாக, கமல் இனி கன்னட மொழி குறித்து பேசக் கூடாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News July 6, 2025
விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த பிரசாந்த் கிஷோர்!

தேர்தலுக்காக TVK தீவிரமாக தயாராகி வரும் நிலையில், அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்(PK) தற்காலிகமாக விலகியுள்ளார். பிஹாரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள உள்ளதால் தனது சொந்த கட்சியை(ஜன் சுராஜ்) கவனிக்கவும், சிறிது காலம் ஓய்வுக்காகவும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளாராம். விஜய் விரைவில் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ள நிலையில், PK-வின் இந்த முடிவு TVK-வினருக்கு ஷாக் கொடுத்துள்ளது.
News July 6, 2025
திருச்செந்தூர் குடமுழுக்கு: புனித நீர் தெளிக்க ட்ரோன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜூலை 7) காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் நடைபெறுகிறது. 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ட்ரோன் மூலம் 20 இடங்களில் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.