News August 8, 2025
டிரம்ப்புக்கு செக்.. ரஷ்யாவை நெருங்கும் இந்தியா

டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு, இந்திய-அமெரிக்க உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. 1947 முதல் ரஷ்யாவுடன் நெருக்கத்தை பேணிய இந்தியா, 90-களுக்கு பிறகு அமெரிக்காவுடன் கைகோர்த்தது. ரஷ்யாவுடன் முழுவதுமாக உறவை துண்டித்தால், அது சீனா-ரஷ்யா உறவை வலுப்படுத்தி, ஆசிய பிராந்தியத்தில் தனக்கு பாதகமாக முடியும் என இந்தியா கருதுகிறது. இனி டெல்லியின் பார்வை மாஸ்கோவை நோக்கி திரும்பலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
Similar News
News August 9, 2025
மீண்டும் அமெரிக்கா செல்லும் பாக்., தளபதி

பாகிஸ்தான் தளபதி அசிம் முனீர் மீண்டும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்க தளபதி மைக்கேல் இ குரில்லாவின் பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறார். பஹல்காம் தாக்குதலை அடுத்து அசிம் முனீர் டிரம்ப்புடன் விருந்தில் பங்கேற்ற நிலையில், 2 மாதங்களில் 2-வது முறையாக பயணம் செய்கிறார். இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் விழுந்த நிலையில், இப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
News August 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 422 ▶குறள்: சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. ▶பொருள்: மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
News August 9, 2025
ஒரு தொகுதிக்கே 6 மாதங்கள் ஆனது: ராகுல்

ஒரு தொகுதியில் உள்ள போலி வாக்குகளை கண்டுபிடிக்க தங்களுக்கு 6 மாதங்கள் ஆனதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பட்டியலை தேர்தல் ஆணையம் தரவில்லை என்றாலும் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், முறைகேட்டில் ஈடுப்பட்ட ஒவ்வொரு தேர்தல் அதிகாரிகளும் என்றாவது ஒருநாள் இதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.