News August 8, 2025
நல்ல தூக்கம் வேணுமா… பாயில் படுங்க!

‘பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்’ என்பது மூத்தோரின் நல்வாக்கு. தமிழர்களது பண்பாட்டின் அடையாளமாக திகழும் கோரைப்பாயில் படுப்பதால் அமைதியான உறக்கம் ஏற்படும். மூட்டு, சதை சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும். உடலின் ரத்த ஓட்டம் சீராவதுடன் மனதிற்கு புத்துணர்ச்சி உண்டாகும். கோரைப்பாயின் மற்றொரு சிறப்பு கோடை காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் இதமான வெப்பத்தையும் அளிக்கும்.
Similar News
News August 9, 2025
ரூமி பொன்மொழிகள்

*நேற்று நான் ஒரு புத்திசாலி, அதனால் உலகை மாற்ற விரும்பினேன். இன்று நான் ஒரு ஞானி, அதனால் என்னை நானே மாற்றிக் கொள்கிறேன். *நீங்கள் எவ்வளவு அமைதியாகிறீர்களோ, உங்களால் அவ்வளவு அதிகமாகக் கேட்க முடியும். *நீங்கள் இழக்கும் எதுவும் வேறொரு வடிவத்தில் திரும்ப வரும். *உங்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தி ஒன்று உள்ளே உள்ளது. அதைத் தேடுங்கள். *நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடுகிறது.
News August 9, 2025
கம்பேக் கொடுக்க தயாராகும் கோலி

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சியில் <<17340341>>கோலி <<>>ஈடுபட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை கோச் நயீம் அமினுடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். வரும் அக்டோபர் 19 முதல் 25 வரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நரைத்த மீசை, தாடியுடன் கோலி இருந்த புகைப்படம் வைரலானது.
News August 9, 2025
ராகுலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பியூஷ் கோயல்

எப்போதும் எதிர்க்கட்சியாக இருக்க ராகுல் காந்தி ஆசைப்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வெளிநாட்டினரின் பேச்சை கேட்டு இந்திய பொருளாதாரம் குறித்து எதிர்மறையாக ராகுல் விமர்சனம் செய்வதாகவும், இதற்காக நாட்டு மக்கள் என்றும் அவரை மன்னிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியாவை உலகநாடுகள் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.