News April 6, 2024

காதல் நோயால் பாதிக்கப்பட்ட சீன மாணவர்

image

சீனாவின் ஜியாங்சு பல்கலைக்கழக மாணவர் லியு (20) விசித்திரமான காதல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கல்லூரியில் தான் மிகவும் அழகான நபர் என்றும் மாணவிகள் அனைவரும் தன்னை விரும்புவதாகவும் நினைத்து அவர் தனது மனதை சாந்தப்படுத்தி வந்திருக்கிறார். இந்த நோய் பாதிப்பால், கவனச் சிதறல் உள்ளிட்ட பிரச்சினைகளை அவர் சந்தித்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு தற்போது டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Similar News

News February 12, 2026

ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? அருண்ராஜ்

image

ஆட்சியில் பங்கு தரமாட்டோம் <<19108663>>முதல்வரால்<<>>, திமுக தனித்து போட்டியிடும் என்று சொல்ல முடியுமா என்று தவெகவின் அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். CM ஸ்டாலின் இன்று அமர்ந்திருக்கும் நாற்காலியில் ஒரு கால்தான் திமுகவுடையது, மீதி 3 கால்கள் கூட்டணி கட்சிகளுடையது. கூட்டணி கட்சிகளை வெறும் ஒட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி அதிகாரப் பகிர்வு அளிக்காமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரான செயல் எனவும் விமர்சித்தார்.

News February 12, 2026

வந்தே மாதரம் உத்தரவை திரும்ப பெறுங்க:ஜவாஹிருல்லா

image

அரசு, பள்ளி நிகழ்ச்சிகளில் 1937-ல் நீக்கப்பட்ட வரிகளுடன் சேர்த்து வந்தே மாதரம் இசைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு ஜவாஹிருல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேசிய கீதம் இசைக்கப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் வந்தே மாதரம் பாடலும் இசைக்கப்பட வேண்டும் என்பது பன்மைச் சமூக இயல்புக்கு நேர்மாறானது. தேசிய கீதத்தின் அரசியலமைப்பு மரபை சிதைக்கும் மத்திய அரசின் கட்டாய அறிவிப்பை உடனே திரும்ப பெற வேண்டும் என்றார்.

News February 12, 2026

கோழிக்கறி விலை மளமளவென சரிந்தது

image

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் பரவுவதால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கோழி இறைச்சி கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் எதிரொலியால், சென்னையில் 3 நாள்களுக்கு முன்புவரை ₹280-க்கும் விற்கப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறி தற்போது ₹220ஆக குறைந்துள்ளது.

error: Content is protected !!