News August 8, 2025

தூத்துக்குடியில் சிவன் மீது சூரிய ஒளி விழும் அதிசய கோவில்

image

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ளது திருமூலநாதர் கோவில் எனப்படும் சிவன் கோவில். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவில் நவலிங்கபுர சிவ ஆலயங்களில் முதலாவது ஆலயமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் மார்ச் மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மூலவர் மீது சூரிய ஒளி படும் வகையில் கட்டப்பட்டுள்ளது பெரும் அதிசயமாகும். மனநலம் இதய நோய் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் பினி தீரும் என்பது ஐதீகம்.

Similar News

News January 6, 2026

தூத்துக்குடி: இனி வரி செலுத்துவது ரொம்ப ஈஸி

image

தூத்துக்குடி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<> இங்கே கிளிக்<<>> செய்து அனைத்து சேவைகளையும் பெறலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களது நண்பர்களுக்கு Share பண்ணுங்க.

News January 6, 2026

தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் இணைந்து தூத்துக்குடியில் ஜன.9 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோரம்பள்ளம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமினை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

குறளாசிரியர் மாநாட்டில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று நடைபெறும் குறளாசிரியர் மாநாட்டில் பங்கேற்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக 15 ஆசிரியர்கள், 15 அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 09.01.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!